சர்வதேச கடற்கரை தினம்: தூய்மைப் பணி மேற்கொண்ட மாணவர்கள்
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு கடற்கரை பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 300.க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவி, மாணவர்கள் பங்கேற்று தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கடலில் அடித்து வரும் குப்பைகளை அகற்றி கடற்கரையை சுத்தம் செய்தனர்.
பின்னர் இந்த குப்பை கழுவுகளில் அடித்து வரும் பிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை தனியே பிரித்து குப்பைகள் முறையாக பழவேற்காடு பகுதி ஊராட்சி நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டது. பின்னர் கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில் லைட் ஹவுஸ் பஞ்சாயத்து தலைவர் கஜேந்திரன், முன்னாள் மாணவர்கள் ரமேஷ், பாளையம் ,ஷேக் முகமது ,மேத்யூ, முகமது அஹமது, மோகன், மூர்த்தி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் , திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜி. தினகரன் செய்திருந்தார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினம்: சர்வதேச கடற்கரை துப்புரவு (ICC) தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறுகிறது, மேலும் இது உலகின் மிகப்பெரிய ஒரு நாள் தன்னார்வ நிகழ்வாகும்.1986 -ஆம் ஆண்டு லிண்டா மரானிஸ் பெருங்கடல் பாதுகாப்புக்காகப் பணிபுரியும் போது கேத்தி ஓ'ஹாராவைச் சந்தித்த நாளில்தான் சர்வதேச கடலோரத் துப்புரவு தினம் தொடங்கியது.
ஓ' ஹாரா கடலில் பிளாஸ்டிக்: ஒரு குப்பை பிரச்னையை விட ஆபத்தானது என்ற அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் மற்ற கடல் ஆர்வலர்களை அணுகி, பெருங்கடல் பாதுகாப்புக்கான தூய்மைப்படுத்துதலை ஏற்பாடு செய்தனர்.முதல் துப்புரவு பணியில் 2,800 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அப்போதிருந்து, தூய்மைப்படுத்தல் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு சர்வதேச நிகழ்வாக நடத்தப்பட்டுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu