மருத்துவமனையில் குளிர்சாதனப்பெட்டி தட்டுப்பாடு..!

மருத்துவமனையில் குளிர்சாதனப்பெட்டி தட்டுப்பாடு..!
X

பொன்னேரி அரசு மருத்துவமனை (கோப்பு படம்)

பொன்னேரி அரசு மருத்துவமனையில் இரண்டு குளிர்சாதனப்பெட்டி மட்டுமே இருப்பதால் இறந்த உடல்களை பாதுகாப்பாக வைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் குளிர்சாதனப்பெட்டி தட்டுப்பாடு இருப்பதால் இறந்த உடல்களை பாதுகாப்பாக வைப்பதற்கு முடியாமல் மருத்துவமனை பணியாளர்கள் அவதியுறுவதால் கூடுதல் குளிர்சாதன பெட்டிகளை அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் அமைந்துள்ளது அரசு பொதுநல மருத்துவமனை. இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 28 கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்,

இந்நிலையில் விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டாலோ,இல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தாலும் அவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டி இரண்டே இரண்டு மட்டும்தான் உள்ளதாகவும். இதனால் கூடுதலாக உடல்களை பாதுகாக்க முடியாமல் உடலை சென்னைக்கு அனுப்பிவைக்கும் நிலை தொடர்கிறது.

உடல்களை சென்னைக்கு கொண்டுச் செல்வதால் சாதாரண மக்கள் பொன்னேரியில் இருந்து சென்னைக்குச் சென்று உடலை பெற்றுவரவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால், தேவையான குளிர்சாதனப்பெட்டிகள் இங்கு இருந்தால் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

அதனால் ,சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக குளிர்சாதன பெட்டிகள் அமைத்து தரவேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொன்னேரி செயலாளர் நா.ஜீவா தெரிவித்துள்ளார். இதனை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கூடுதலான குளிர்சாதன பெட்டிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!