இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: மின்கம்பங்களில் செடி, கொடிகள் அகற்றம்

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: மின்கம்பங்களில் செடி, கொடிகள் அகற்றம்
X

மின் கம்பத்திலிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலியாக மின்கம்பங்களில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் சில மின்கம்பங்கள் பழுதடைந்து அவற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் பச்சை செடிகள் என்பதால் மின்சாரம் இவற்றிலும் பரவும் என்பதால் அப்பகுதியில் பெரியவர்களோ அல்லது சிறு குழந்தைகள் தெரியாமல் இவற்றை தொட்டுவிட்டால் மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பராமரிப்பு பணிகளை மின்சார வாரிய அதிகாரிகள் செய்வது வழக்கம். இப்பணியை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட அந்தந்த பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சாலை ஓரங்களில் இருப்புறம் மின் கம்பிகள் செல்லும் பாதைகளில் உள்ள மரங்களை அகற்றுவதும், கம்பங்களில் உள்ள பச்சை செடி கொடிகளை அகற்றுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வது வழக்கம். ஆனால் பராமரிப்பிற்கு அப்பாற்பட்டு மின்வாரியம் ஊழியர்கள் சில இடங்களில் உள்ள கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகள் வளர்ந்து வருவதை கவனிக்காமல் செல்வதால் கம்பங்களை தொட்டால் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும் அபாயமும் உள்ளது. எனவே ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் நிலை இப்படி தான் இருக்கிறது என்று ஆரணி பகுதியில் வாழும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை கண்டுகொண்டு பழுதடைந்த கம்பங்களை கம்பங்களை மாற்றி கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை என்ற செய்தி நேற்று (29.12.2022) அன்று இன்ஸ்ட்டா செய்தி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்த செய்தி எதிரொலியாக செடி, கொடிகள் வளர்ந்துள்ள கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் கண்டறிந்து மின் கம்பங்கள் செல்லும் பாதையில் குறிப்பிடும் சில மரக்கிளைகளையும், செடி, கொடிகளை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!