புழல் சிறையில் மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்த அமைச்சர்
புழல் சிறையில் கைதிகளின் போதை மறுவாழ்வு மையத்தை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்
புழல் சிறையில் கைதிகளின் மறுவாழ்விற்காக போதை மறுவாழ்வு மையத்தை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உட்பட சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகளில் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார். மேலும் சிறைவாசிகளுக்கான கிராமிய விளையாட்டு போட்டியினையும் சிறைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதில்,லெமன் வித் ஸ்பூன், இசைநாற்காலி, கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை விளையாடி சிறைவாசிகள் புத்துணர்வு பெற்றனர். அனைத்து சிறைகளிலும் கிராமிய விளையாட்டுகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளுக்கான மறுவாழ்வு, மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு உள்ளிட்டவற்றை கொண்ட தொகுப்பாக RRR புத்தகத்தை அமைச்சர் ரகுபதி வெளியிட, சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி பெற்று கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu