சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.53.33 லட்சம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.53.33 லட்சம்

பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக 53 லட்சத்து 33 ஆயிரத்து 781 ரூபாய் வசூலியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.

இந்த கோவிலில் தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை நாட்களில் நெய் தீபம் ஏற்றி சுற்றி வளம் வந்து வைபட்டு சாமி தரிசனம் செய்தால் திருமணத்தடை வீட்டுமனை வாங்குதல் வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீரும் என்பது பக்தர்கள நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிறுவாபுரி சுற்றி உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இதையடுத்து பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி மேற்பார்வையில் முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட உண்டியல் பணம் 53 லட்சத்து 33 ஆயிரத்து 781 ரூபாய் மேலும் தங்கம் ஏழு கிராம் 500 மில்லியும். வெள்ளி 6 கிலோ 137 கிராம் பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப் பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

Tags

Next Story