ராகுல் காந்தி பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: எம்எல்ஏ வழங்கல்

ராகுல் காந்தி பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்:  எம்எல்ஏ வழங்கல்
X

 பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.

அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தியின் 53 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி அரசு மருத்துவமனைகளில் ராகுல்காந்தி பிறந்தநாளில் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள எட்டு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர்டி எல் சதாசிவலிங்கம், பொன்னேரி நகர் தலைவர் கார்த்திகேயன், ஆரணி நகர தலைவர் சுகுமார், உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




Tags

Next Story
ai powered agriculture