மீஞ்சூர் ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலை வழங்கல்

மீஞ்சூர் ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலை வழங்கல்
X

குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கிய முன்னாள் கவுன்சிலர் காசி.

மீஞ்சூர் ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 17வது வார்டு புங்கம்பேடு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலையினை முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன், அறிவுறுத்தலின் பேரில் மீஞ்சூர் நகர பொருளாளரும் முன்னாள் கவுன்சிலருமான காசி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 17வது வார்டு கவுன்சிலர் மோனிகா ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், கலந்துகொண்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!