அரசு கல்லூரி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் கிருஸ்துதாஸ் காந்தி பங்கேற்பு..!

அரசு கல்லூரி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் கிருஸ்துதாஸ் காந்தி பங்கேற்பு..!
X
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுக்கல்லூரி புகழாஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி கலந்துகொண்டார்.

உயர்கல்விக்கான அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்.ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் பாஸாக்க வேண்டும் என்று பொன்னேரியில் நடைபெற்ற அரசுக்கல்லூரி விழாவில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் கிருஸ்துதாஸ் காந்தி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசுக்கல்லூரியில் பணியாற்றி மறைந்த பேராசிரியர் முனைவர் குளோரியின் புகழாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இக்கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் இந்நாள் முதல்வர் உட்பட கல்வியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் துவக்கத்தில் முனைவர் குளோரியின் திருவுருவ படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அருப்புக்கோட்டை அரசுக்கல்லூரி முதல்வர் அந்தோணி டேவிட்நாதன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் குளோரியின் சமூக சேவையை விளக்கும் வகையில் தொகுக்கப்பட்டிருந்த குளோரி மலர் என்ற நூலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் முன்னிலையில் தமிழகத்தின் முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் கிருத்துதாஸ் காந்தி வெளியிட்டார்.

இதனை வேல்ஸ் பல்கலைக்கழக முதல்வர் மகாலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிக்குமார் பெற்று கொண்டனர். இதையடுத்து விழாவில் கிருஸ்துதாஸ் காந்தி பேசுகையில்,

ஒன்றாம் வகுப்பிலிருந்து முதுகலை படிப்பு வரை மெரிட் தேவையில்லை என வலியுறுத்தியவர் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் பாஸாக்கி விடுங்கள். அதிலென்ன உங்களுக்கு பிரச்னை என கேள்வி எழுப்பினார். ஐந்து சீட்டுக்கு பத்துபேர் போட்டியிட்டால் நுழைவுத்தேர்வு தேவைப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதுகிறார்கள், தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் பத்து லட்சம் சீட் இருக்கின்றது.பிறகு எதற்கு நூறு சதவீதம் ரிசர்வேஷன் என வினா எழுப்பியவர் உயர்கல்விகளுக்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்வதே சரியான தீர்வு என குறிப்பிட்டார்.

இதில் கல்லூரி முதல்வர் தில்லைநாயகி, முன்னாள் முதல்வர்கள் வீரபத்திரன், ஜோசப்துரை, பானுமதி, கருப்பன், சீனிவாசன், சேகர், அரசு மருத்துவர் அனுரத்னா, நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முனைவர் பொன்செல்வி நன்றி கூறினார்.

Tags

Next Story