சான்றிதழ் பெற்ற பழங்குடி பெண்களுக்கு பொன்னேரி சார் ஆட்சியர் வாழ்த்து
பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் 8 பழங்குடி பெண்களையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினர்.
தொழில் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பொன்னேரி வட்டத்தைச் சார்ந்த 8 கடலோர மற்றும் பழங்குடி பெண்களுக்கு பொன்னேரி சார் ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் மத்திய உவர் நீர் ஆராய்ச்சி நிலையமும் (ஐ.சி.எ.ஆர்-சிபா),தமிழ்நாடு சுற்றுலா துறையும் இணைந்து கடலோர மற்றும் பழங்குடியின பெண்களின் வெற்றிகரமான தொழில் அனுபவங்களை பகிர்வதும் மற்றும் கிராமப்புற சுற்றுலா உட்பட வாழ்வாதார வாய்ப்புகள் பற்றிய தேசிய விழிப்புணர்வு பட்டறை நடைபெற்றது.
இதில் கடலோரம் மற்றும் பழங்குடி கிராம பகுதிகளில் உவர் நீர் தொழில்களான நண்டு வளர்ப்பு,கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு, மீன் மற்றும் நண்டு இணைந்து வளர்ப்பு,கலர் மீன் வளர்ப்பு,மீன் தீவன தயாரிப்பு,மீன்,நண்டு மற்றும் கோழி,ஆடு வளர்ப்பு, இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்களை நல்ல முறையில் செய்தமைக்காக திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர்,தூத்துக்குடி,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த 16 கடலோர பெண்கள் மற்றும் இருளர் பழங்குடி மகளிர்க்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற இதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பழங்குடி நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மத்திய உவர்நீர் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் குல்தீப் குமார்லால்,தமிழ்நாடு சுற்றுலா துறை அலுவலர்கள் சின்னசாமி,எம்.எஸ்.எஸ்.ஆர்.எப்.சேர்மன் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட கடலோர மற்றும் பழங்குடி மகளிர்களான காட்டூர் ஜெயா,ஜெயபாரதி,குளத்துமேடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த முக்தா,உஷா,விஜயா,தோனிரேரவு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி,லட்சுமி,விஜயா ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்
.இதனை அறிந்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் 8 பழங்குடி பெண்களையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினர். மத்திய உவர் நீர் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் சாந்தி இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu