தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு  பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு
X

தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகளை காற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சி சார்பாக நடந்த  பாராட்டு விழா.

பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பச்சிளம் குழந்தைகள் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பு அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை கொண்டு உடனடியாக அந்த தீயை கட்டுப்படுத்தி அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை அவர் காப்பாற்றினார்.

இதற்காக தமிழக முதலமைச்சர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து நேற்று ஜெயக்குமார் வசிக்கும் பஞ்செட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அப்போது செவிலியர் ஜெயக்குமாருக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!