திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் இடி தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் இடி தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் இடி- மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.( பைல் படம்)

திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் பெய்த கன மழையில் இடி தாக்கி விவசாயி இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூரை சேர்ந்தவர் முருகன் விவசாயியான இவர் மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இன்று மாலை பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த பொழுது, மாடுகளை மேய்த்து முடித்த முருகன் வீட்டிற்கு மாடுகளை ஓட்டிச் சென்றார்.

அப்போது 2. மாடுகள் காணாமல் போனதால் இருசக்கர வாகனத்தில் அவர் மாடுகளை தேடியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பலத்த மழை பெய்தது. மழையின்போது இடி தாக்கியது. தாக்கிய இடி முருகன் மீது விழுந்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!