பொன்னேரியில் பிரசித்தி பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக பொன்னேரியில் பெருமாளும், சிவனும் சந்திக்கும் பிரசித்தி பெற்ற "ஹரிஹரன் சந்திப்பு" திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரண்ய நதி என அழைக்கப்படும் ஆரணி ஆற்றின் கரையில் உள்ள பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கருடோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கரி கிருஷ்ண பெருமாளும், அகத்தீஷ்வரரும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இந்த அரிய நிகழ்வை காண திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது "கோவிந்தா" "கோவிந்தா"எனவும் "ஹரஹரா" "ஹரஹரா" எனவும் பக்தி பரவசத்தோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஹரியும், ஹரனும் சந்திக்கும் இந்த வைபவம் காரணமாகவே, அந்த பகுதிக்கு ஹரிஹரன் பஜார் என பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிரீன்வேல்பேட்டை என்று அழைக்கப்பட்ட பகுதி, ஹரி-ஹரன் சந்திப்பால் "ஹரி-ஹரன் பஜார்" என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது. அகத்திய முனிவரும், பரத்வாஜ முனிவரும் சிவனையும், பெருமாளையும் ஒரு சேர சந்திக்க வேண்டும் என ஆரணிய நதியில் தவம் இருந்ததால் சிவபெருமானும், பெருமாளும் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை நினைவுப்படுத்தும் விதமாக தான் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இந்த பிரமோற்சவ விழா வெகுவிமரிசியாக நடைபெறுகிறது.
இது இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கருட வாகனத்தில் கரி கிருஷ்ண பெருமாளும், ரிஷப வாகனத்தில் அகத்தீஸ்வரும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.அப்போது கரி கிருஷ்ண பெருமாளிடம் இருந்தும் அகத்தீஸ்வரருக்கு சீர்வரிசையும், அகத்தீஸ்வரரிடம் இருந்து கரி கிருஷ்ண பெருமாளுக்கு சீர்வரிசையும் வழங்கப்பட்டது.
பின்னர் பெருமாளும், சிவுனம் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை கரி கிருஷ்ண பெருமாளின் தேர்திருவிழா நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu