அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து..!

அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து..!
X
பொன்னேரி அருகே வல்லூர், அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொன்னேரி அருகே வல்லூர் அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

இங்குள்ள 1வது அலகில் நேற்று இரவு டர்பன் ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டர்பனில் தீ கொழுந்து விட்டு பிற இடங்களுக்கும் வேகமாக பரவி எரிந்தது. அனல் மின் நிலையத்திற்குள் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 1மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக 1வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அனல்மின் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business