பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்..!

பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்..!
X

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.


பொன்னேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மாநிலச் பொது செயலாளர் வினோஜ் செல்வம் பங்கேற்பு.

திமுக எம்பிக்கள் மக்கள் திட்டங்களுக்கான நிதியை பற்றி கவலைப்படாமல் உதயநிதி, இன்பநிதி குறித்து மட்டுமே கவலைப்படுகின்றனர். முதலமைச்சர் பதவியேற்ற போது சிங்கப்பூர் போல மாற்றுவேன் என கூறிய நிலையில் தற்போது தமிழ்நாடு சோமாலியா போல மாறி வருகிறது எனவும் குற்றச்சாட்டு - பொன்னேரியில் பாஜக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்ற வினோஜ் செல்வம் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொது செயலாளர் வினோஜ் செல்வம் கலந்து பட்ஜெட் தொடர்பாக எடுத்துரைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் செல்வம் 2024 தேர்தலில் 50ஆண்டுகளில் இல்லாத வகையில் பாஜகவிற்கு 20% வாக்குகளை பொதுமக்கள் செலுத்தி உள்ளதாக கூறினார்.

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு 2ஆம் இடம் பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கூறினார். பட்ஜட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லை என திமுக கூறி வருவதாகவும், பட்ஜெட்டில் எத்தனை பக்கம் உள்ளது என்பது கூட முழுமையாக தெரிந்து கொள்ளாமல் மக்களிடம் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறுவதை ஏற்க முடியாது எனவும், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்றார்.


தமிழ்நாடு போடும் பட்ஜெட்டில் எத்தனை மாவட்டங்கள் பெயர் வர போகிறது என்றார். பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், 60000கோடி ரூபாயில் 1000 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதாக கூறினார். முத்ரா கடன், அண்டை நாடுகள் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், இஸ்லாமிய நாடுகள் பல இருக்கின்ற சூழலில் பங்களாதேஷ் பிரதமராக இருந்தவர் இந்தியாவில் பாதுகாப்பு என்பதால் அடைக்கலம் புகுந்ததை குறிப்பிட்டார். பங்களாதேஷ் போல இந்தியாவில் நடக்கலாம் என காங்கிரஸ் கட்சியினர் கூறுவது குறித்த கேள்விக்கு சல்மான் குர்ஷீத்தின் எண்ணம் இது எனவும், காங்கிரஸ் கட்சியினர் மனதில் உள்ள ஆசை இது தான் எனவும், இந்தியாவில் கலவரம் உருவாக வேண்டும், சூறையாடப்பட்ட வேண்டும், மதக்கலவரம் உருவாக வேண்டும் என்பதை செய்து வருவதாக கூறினார்.

பிரிவினை நாள் வரப்போகிறது எனவும், இந்தியாவை துண்டாக வெட்டிய நாள் எனவும், அகண்ட பாரதம் கனவை சிதைத்த நாள் என்றார். காங்கிரஸ் கட்சி எப்போதுமே இந்தியாவிற்கு நேர்மையாக இருந்தது கிடையாது எனவும், எப்படி கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனாவிற்கு நேர்மையாக இருப்பார்களோ அதே போல காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் வெளிநாடுகளில் சொல்வதை கேட்டு இந்தியாவை துண்டாட நினைக்கிறார்கள் எனவும் இதனை காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுல் போன்றோர் கண்டிக்கவில்லை என்றார்.

பாஜக இருக்கும் வரை இது நடக்க அனுமதியில்லை என்றார். பல முறையை எச்சரிக்கை கொடுத்ததும் கண்டுகொள்ளாமல் லாட்டரி ஓட்டுவதில் மட்டுமே குறியாக இருந்துள்ளனர் எனவும், மலை பகுதிகளில் முறையான அனுமதி கொடுக்காததாலேயே இது போன்ற பேரழிவு வயநாட்டில் ஏற்பட்டதாக தெரிவித்தார். பாராளுமன்றம் முடிந்தவுடன் பிரதமர் சென்ற இடம் வயநாடு என்றார். காலையிலேயே எதிர்க்கட்சி சார்ந்த முதல்வரை தொடர்பு கொண்டு வயநாடு இயல்புநிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுத்தது பிரதமர் மோடி என்பதை செல்வப்பெருந்தகை மறந்து விட கூடாது என்றார்.

உதயநிதி துணை முதல்வராக வர உள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு திமுக கூட்டணி எம்பிக்கள் டில்லிக்கு சென்று நிதி பெற்று வருவார்கள் என மக்கள் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் நிதியை பற்றி கவலை கொள்ளாமல் உதயநிதி, இன்பநிதி பற்றி மட்டுமே எண்ணி கொண்டிருப்பதாகவும், அதை பற்றி தங்களுக்கு கவலை இல்லை எனவும், ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் போது சிங்கப்பூர் போல மாற்றுவேன் என கூறியதாகவும், தற்போது தமிழ்நாடு சோமாலியா போல மாறி வருவது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

அண்ணாமலை மாற்றப்படுவதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை விரைவாக, சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு கேவலமாக இருப்பதாக மாயாவதி உள்ளிட்டோர் குரல் கொடுத்த நிலையில் தற்போது காவல்துறைக்கு சுதந்திர செயல்பாடு கொடுத்ததால் கொலையில் தொடர்புள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், தேவைப்பட்டால் சிபிஐ உதவியை காவல்த்துறை எடுத்து கொள்ளலாம் எனவும், கொலையில் தொடர்புடைய ஒருவர் கூட தப்பிக்க கூடாது என்றார்.

கடலில் கற்களை கொட்டி அதானி துறைமுக விரிவாக்கம் செய்தால் பழவேற்காடு அழிந்து விடும் என்ற கேள்விக்கு மாநில அரசு வழங்கும் சுற்றுச்சூழல் அறிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், திமுக எம்பி பாராளுமன்றத்தில் 500கோடி ஏன் கூடுதலாக ஒதுக்கவில்லை என்ற கேள்விக்கு நிதின் கட்கரி 1000கோடி அல்ல 5000கோடி கொடுக்க தயாராக இருப்பதாகவும், அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை எனவும், சுற்றுச்சூழலை பாதுகாத்து திட்டங்களை நடைமுறை படுத்திட வேண்டும் என்றார்.

முன்னதாக கூட்டத்தின் போது அவ்வழியே சாமி ஊர்வலம் வந்ததால் மேடையில் இருந்து இறங்கி வந்து வினோஜ் செல்வம் சாமி தரிசனம் செய்து மீண்டும் மேடைக்கு சென்று கூட்டத்தில் பேசினார். கூட்டத்தின் முடிவில் வினோஜ் செல்வத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு வீர வாள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது