கோர்ட் உத்தரவுப்படி அரசு நிலத்தில் நடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அகற்றம்
நில ஆக்கிரமிப்பை மீட்க வந்த வருவாய்த் துறையினர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அப்புறப்படுத்தி நிலம் கையகப்படுத்தப்பட்டது.
தனிநபரின் ஆதாயத்திற்காக நெற்பயிர்களை அகற்றுவதாக விவசாயிகள் புகார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியோடு அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை பிடுங்கி அப்புறப்படுத்தினர். வழக்கு தொடுத்த தனிநபர் ஒருவர் தமது நிலத்திற்கு பாதை வேண்டும் என்பதற்காக உண்மையை மறைத்து வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், மேலும் தனிநபரின் ஆதாயத்துக்காக அதிகாரிகள் தங்களது பயிரை அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்.
மேலும் நெற்பயிர்கள் அறுவடை வரை அவகாசம் கேட்டும் தங்களுக்கு அவகாசம் வழங்காததால் வேதனை அளிக்கிறது என்றும் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்தோம். தனிநபர் ஒருவருக்காக தங்கள் விவசாயம் செய்த நிலத்தில் உள்ள நெற்பயிர்களே அழித்து விட்டதாகவும் விவசாயி வேதனை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu