எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
X

புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து கோவில் சுற்றி வலம் வந்த சிவாச்சாரியார்கள்  

அப்ளாவரம் எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி அடுத்த அப்ளாவரம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் அப்ளாவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தை புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.

இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் ஆலய வளாகத்தில் யாக குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை, மகாபூரண ஹூதி உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.

இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து கோவில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தினர்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆலயத்தின் சார்பில் பத்ரளுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர் வெற்றி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டவர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil