தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்..!

தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்..!
X

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பெரியபாளையம் அருகே ஆரணி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஆரணி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும்120 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நோட்டு,புத்தகம், பென்சில்,பேனா, உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவரம் ஒன்றிய தலைமை சந்தோஷ் குமார் செ அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஆரணி நகர நிர்வாகிகள் ஆதித்தன்,விஜய் ரவி, நாகராஜ் சத்தியா சின்னா, ,ரமேஷ், ராஜா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழக பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் சிலம்பரசன், மற்றும்

பொன்னேரி தொகுதி செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் ஆசிரிய பெருமக்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!