பழவேற்காடு முக துவாரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்
பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணி
பழவேற்காட்டில் முகத்துவாரம் முற்றிலும் அடைப்பட்ட நிலையில் தற்காலிக முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் தீவிரம். முகத்துவாரம் மணல் திட்டுக்களாக தூர்ந்து போனதால் 15 நாட்களாக 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைப்பு.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுக்களால் அடைபட்டு முற்றிலும் தூர்ந்து போயுள்ளது. இதனால் கடந்த 1ஆம் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஒரு சில மீனவர்கள் மட்டுமே மிகுந்த சிரமத்துடன் கடல் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வார முடிவு செய்திருந்த நிலையில் கடந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பழவேற்காடு ஏரியில் படகில் சென்று ஆய்வு செய்து தற்காலிக தீர்வாக இரண்டு முகத்துவாரம் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து தற்காலிகமாக தூர்வாரும் பணிகளுக்கு பூஜைகள் போடப்பட்ட நிலையில் கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக பணிகள் முடங்கியது. மழை ஓய்ந்த நிலையில் மீன்வளத்துறை, நீர்வளத்துறை இணைந்து இரண்டு இயந்திரங்களின் உதவியுடன் தற்காலிக முகத்துவாரத்தினை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஓரிரு நாட்களில் தற்காலிக முகத்துவாரம் தூர்வாரப்பட்டு மீனவர்கள் தொழிலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu