கணவருடன் தகராறு: மனைவி- குழந்தை விஷம் குடித்து தற்கொலை

கணவருடன் தகராறு:  மனைவி- குழந்தை   விஷம் குடித்து  தற்கொலை
X

பைல் படம்

மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி தானும் விஷம் குடித்ததுடன் தன் குழந்தைக்கும் விஷத்தை கொடுத்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கிருஷ்ணாபுரம் துர்கா நகரை சேர்ந்தவர் நவீன் குமார். இவரின் மனைவி சிவசங்கரி ( 25). இத்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 11 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது . இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி தானும் விஷம் அருந்தி தன் குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தாய்-குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தாய் குழந்தை இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிவசங்கரி மற்றும் அவரது 11 மாத ஆண் குழந்தை ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story