வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு

வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு
X

கொடூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள்.

கொடூர் கிராமத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் டிராக்டர் மெக்கானிக்கான கோபி. இவர் தமக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக நேற்று கடைக்கால் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுமார் 2அடி ஆழம் பள்ளம் தோண்டியபோது பாறை போன்று பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்ட நிலையில் அதனை பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.

அதில் பெருமாள், ஆண்டாள், அலமேலு ஆகிய 3 சாமி சிலைகள் பூமிக்கடியில் புதைந்திருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு தீபம் ஏற்றி கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வழிபாடு நடத்தினர். தங்களது ஊரில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை இங்கேயே கோவிலில் வைத்து வழிபாடு நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை மீட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india