வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரி அருகே நரிக்குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ், இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் அலட்சியம் காட்டி வரும் வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

பொன்னேரி அருகே வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சிறு புழல் பேட்டை பகுதியில் 15 அருந்ததியர் குடும்பத்தினருக்கும், ஆத்துப்பக்கம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு ம் சாதி சான்று, வீட்டுமனைப்பட்டா, இறப்பு, பிறப்பு சான்று ஆகியவை வழங்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், அதற்கான அறிக்கையை கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வதிற்கு அனுப்பிய அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

வருவாய் கோட்டாட்சியரின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து பொன்னேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழக முதல்வர் உத்தரவிட்டும் நரிக்குறவர், மற்றும் மலைவாழ் மக்களுக்கு பிறப்பு ,இறப்பு,சாதி சான்று வீட்டுமனைப் பட்டா ஆகியவை வழங்காமல் அவர்களை புறக்கணித்து வரும் வருவாய் கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,உடனடியாக பிரச்சினைக்கு தீர்வுக்கான கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன,

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!