பொன்னேரி அருகே அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா

பொன்னேரி அருகே அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
X

பொன்னேரி அருகே உள்ள நெடுவரம்பாக்கம் வட அண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது 

பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை ஜோதிரூபமாக தரிசித்தனர்.

சிறப்பு மிக்க திருக்கார்த்திகை தீபத்திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மலை மேல் உள்ள தீபக்கொதீபம் ஏற்றப்பட்டது.ப்பரையில் நேற்று

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபிதகுஜலாம்பாள் சமேத அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் பக்தர்களால் வட அண்ணாமலை என போற்றப்படுகின்றது. இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அண்ணாமலையாருக்கும் அபிதகுஜலாம்பாள் அம்மனுக்கும் மஹா தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு நடந்தேறியது.

கோவிலை சுற்றி அகல்விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. இதையடுத்து பக்தர்கள் புடைசூழ சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் ஓத சுமார் 300 கிலோ அளவிலான மஹாதீபம் கோவில் பிரகாரத்தின் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலின் உச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என பக்திப்பெருக்குடன் கோஷமிட்டு இறைவனை வழிபட்டனர்.

இதையடுத்து சிவபெருமான் ஜோதிரூபமானவன் என்பதை உணர்த்தும் விதத்தில் ராஜகோபுரத்தின் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!