பொன்னேரியில் தனியார் மருத்துவக்குழுமம் சார்பில் கார்பரேட் கிரிக்கெட் போட்டி

பொன்னேரியில் தனியார் மருத்துவக்குழுமம் சார்பில் கார்பரேட் கிரிக்கெட் போட்டி
X

பொன்னேரியில் பிரபல தனியார் மருத்துவக்குழுமம் சார்பில் கார்பரேட் கிரிக்கெட் டோர்னமெண்ட்.தமிழக கிரிக்கெட் வீரர் கணேஷ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார்.

கார்பரேட் கிரிக்கெட் போட்டியை தமிழக கிரிக்கெட் வீரர் கணேஷ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார்.

பொன்னேரியில் பிரபல தனியார் மருத்துவக்குழுமம் சார்பில் கார்பரேட் கிரிக்கெட் தொடர் போட்டியை .தமிழக கிரிக்கெட் வீரர் கணேஷ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் தனியார் கல்லூரியில் 36 அணிகள் பங்கேற்கும் கார்பரேட் கிரிக்கெட் போட்டிகள் நேற்று துவங்கியது. சென்னையில் இயங்கும் பிரபல தனியார் மருத்துவ குழுமம் சார்பில் நடைபெறும். இத்தொடரை தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கணேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொடரின் பரிசுக்கோப்பைகளை அறிமுகப்படுத்தி வீரர்களுக்கு சீருடையை வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில் தனது சிறுவயதில் டென்னிஸ் பந்தில்தான் கிரிக்கெட் விளையாட்டை துவக்கியதாக குறிப்பிட்டவர், இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணியினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.இதையடுத்து பூவா தலையா போட்டு தொடரின் முதல் ஆட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

ஏழு நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் புள்ளிகள் அடிப்படையில் நடத்தப்படும் எனவும் அடுத்த சுற்றுப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும் எனவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும், அன்று மாலையே பரிசளிப்பு விழா நடக்கும் என போட்டி அமைப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story