வடிவேலு பாணியில் குளங்களை காணவில்லை என பொன்னேரி சார் ஆட்சியரிடம் புகார்

வடிவேலு பாணியில் குளங்களை காணவில்லை என பொன்னேரி சார் ஆட்சியரிடம் புகார்
X

பொன்னேரி அருகே சினிமாவில் வரும் காட்சியை போல குளங்களை காணவில்லை என பொன்னேரி சார் ஆட்சியரிடம் புகார் அளித்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் 7 குளங்களை காணவில்லை என இளைஞர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்

பொன்னேரி அருகே சினிமாவில் வரும் காட்சியை போல குளங்களை காணவில்லை என பொன்னேரி சார்ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் 7 குளங்களை காணவில்லை என இளைஞர் ஒருவர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து பூதூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் அளித்த மனுவில், கடந்த 2018-ஆம் முதல் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதில் 7 குளங்கள் அடங்கும் எனவும், அவை காணவில்லை என. வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இது குறித்து பலமுறை வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித் தபின்னர், ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கை பெயர் பலகை வைக்கப்பட்டது. இதன்பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. கிராமத்திற்கு வாழ்வாதாரமாகவும், கால்நடைகளுக்கு நீராதாரமாகவும் உள்ள 7 குளங்களை காணவில்லை என்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னதாக, 7 குளங்களை காணவில்லை எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையோடு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தர்ணாவில் ஈடுபட்ட அவரிடம் துணை வட்டாட்சியர் பாரதி பேச்சு நடத்தினார். அதன்பின்னர் சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் பேச்சு நடத்துவதற்காக அழைத்து சென்றார். இது குறித்து விசாரித்த சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிகூறியதால் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. 7 குளங்களை காணவில்லை என இளைஞர் புகாரளித்திருப்பது பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு