பழவேற்காடு முகத்துவாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பழவேற்காடு முகத்துவாரத்தில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

பழவேற்காடு முகத்துவாரத்தை ஆய்வு செய்த ஆட்சியர் பிரபு சங்கர்

பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்

பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுக்களாக அடைபட்டுள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இரண்டு தற்காலிக முகத்துவாரம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. இங்கு நிரந்திர முகத்துவாரம் அமைக்க 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

முறையான அனுமதி கிடைக்காததால் முகத்துவாரம் திட்டம் தொடங்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுக்களால் அடைபட்டு முற்றிலும் தூர்ந்து போயுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வார முடிவு செய்திருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பழவேற்காடு ஏரியில் படகில் சென்று தூர்ந்து போன முகத்துவாரம் பகுதியில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறியதாவது:

முகத்துவாரம் தூர்ந்து அடைபட்டுள்ள நிலையில் தற்காலிக தீர்வாக நீர்வளஆதாரத்துறை மூலமாக இரண்டு முகத்துவாரம் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மிதவை ட்ரட்ஜர் இயந்திரம் கொண்டு ஒரு முகத்துவாரம் ஓரிரு நாட்களில் ஏற்படுத்தி தரப்படும் எனவும், மற்றொரு இடத்தில் மீனவர்களின் கோரிக்கையின் இயந்திரங்களின் உதவியுடன் 10 நாட்கள் முதல் 1மாதத்திற்குள் தூர்வாரி நீரோட்டத்திற்கான பாதை அமைத்து தரப்படும் எனவும் கூறினார்

அந்த முகத்துவாரம் ஆறுஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார். நிரந்தர முகத்துவாரம் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil