பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளம் மற்றும் அதானி துறைமுக நிர்வாகங்களின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளம் மற்றும் அதானி துறைமுகம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளம் மற்றும் அதானி துறைமுக நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 12மணி நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத போக்குகளை நிறுவனங்கள் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu