பொன்னேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்
தொழிலாளர்கள் தரவுகள் தொலைந்து விட்டதாக கூறியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர்
பொன்னேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். 77.லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் தொலைந்து விட்டதாக கூறுவதை கண்டித்து போராட்டம். பணபலன்களை பெற முடியாமல் தவிப்பதாக புகார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் 100.க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முறை சாரா தொழிலாளர்கள் என சுமார் 77லட்சம் தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்த நிலையில் 77லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் தொலைந்து விட்டதாக அதிகாரிகள் மெத்தன போக்குடன் பதிலளிப்பதாக புகார் தெரிவித்தனர்.
காவல்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை என அனைத்து துறையின் ஆவணங்களும் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் தொழிலாளர்களின் தரவுகள் மட்டும் தொலைந்தது எப்படி என கேள்வி எழுப்பினர். தொழிலாளர்கள் நலனில் மெத்தனம் காட்டும் தமிழக அரசையும், அதிகாரிகளையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தரவுகள் தொலைந்து விட்டதாக கூறுவதால் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவி தொகை, ஓய்வூதிய தொகை, இறப்பிற்கான பணப்பயன் என அரசின் எந்த திட்டங்களையும் பெற முடியாமல் 77லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையை அரசு சீரழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் நிபந்தையின்றி புதிய பதிவேற்றங்களை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். ஆன்லைன் சர்வர் செய்லபடுவதற்கும், தொலைந்த தரவுகளை மீட்டெடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு நிர்வாகிகள் ஏ.ஜி.சந்தானம், எஸ்.ஏ.கலாம், ஜி.சூரியபிரகாஷ், எம் . நாகராஜன், எம்.சந்திரசேகரன், வி.ஆர்.லட்சுமணன், எம்.சி.சீனு, ஜி.வினாயகமூர்த்தி, நரேஷ்குமார், அனீப் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu