நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள்   உயிரிழப்பு
X

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள்

மீஞ்சூர் அருகே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு. காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அன்பழகன் நகரை சேர்ந்த ஜெனித் (14) 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தமது நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன் ஜெனித் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெனித் சேற்றில் சிக்கி மேலே வர முடியாமல் நீரில் மூழ்கினார்.

சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரின் அக்கம்பக்கத்தினர் வந்து சிறுவனை மீட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல நத்தம் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் (5) 1ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தமது நபர்களுடன் விளையாடி கொண்டிருந்த குடிநீர் சேமிக்கும் மூடப்படாத தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த சோழவரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





Tags

Next Story
ai solutions for small business