பொன்னேரி அருகே ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்

பொன்னேரி அருகே ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
X

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கடைசி அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல்  குதித்து விளையாடும் சிறுவர்கள்

வல்லூர் பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றில் அணைக்கட்டு பகுதியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து விளையாடுகின்றனர்.

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கடைசி அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்தும், டைவ் அடித்தும், நீச்சலடித்தும், குளிப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1.அடி உயரத்திற்கு 2000.கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.

இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் அப்பகுதியில் உள்ள சில சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்து வருகின்றனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டில் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் பள்ளிச்சிறுவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அணைக்கட்டு பகுதியில் காவல்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.



Tags

Next Story
the future of ai in healthcare