படகு சவாரி சென்ற தொழிலதிபர் ஏரியில் தவறி விழுந்து மரணம்

பழவேற்காட்டில் தடையை மீறி படகு சவாரி சென்ற இறால் பண்ணை உரிமையாளர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
படகு சவாரி சென்ற தொழிலதிபர் ஏரியில்  தவறி விழுந்து மரணம்
X

திருவேற்காடு ஏரியில் மூழ்கி உயிரிழந்த தொழிலதிபர்

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் தடையை மீறி படகு சவாரி சென்ற இறால் பண்ணை உரிமையாளர் நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு .

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த அருண் (47) இவருக்கு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவதானம் அருகே இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தமது நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் பழவேற்காட்டில் நேற்று மதியம் சுற்றுலா சென்றுள்ளார். பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி அருண் படகு சவாரி சென்றுள்ளார். முகத்துவாரம் அருகே சென்று விட்டு மீண்டும் பழவேற்காடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது படகிலிருந்து தவறி விழுந்து அருள் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் நீரில் குதித்து நீண்ட நேரம் தேடி பின்னர் நீரில் மூழ்கிய அருணை மீட்டு சிகிச்சைக்காக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அருண் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்த இறால் பண்ணை உரிமையாளர் அருண் சடலம் பிரேத பரிசோத னைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி பழவேற்காடு ஏரியில் நண்பர்களுடன் படகு சவாரி சென்றவர் நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Updated On: 24 Sep 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி...
  2. ஈரோடு
    கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது
  3. சென்னை
    வெள்ளத்தில் சிக்கிய தந்தையை தேடி சென்ற மகன் உயிரிழப்பு: இது சென்னை...
  4. விளையாட்டு
    அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு...
  5. நீலகிரி
    குன்னூர் அருகே மலைச்சரிவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டெருமைகள்
  6. கரூர்
    கரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்
  7. தர்மபுரி
    tதர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
  8. கோயம்புத்தூர்
    புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சென்னைக்கு 1 டன் காய்கறி, 1.5 டன்...
  9. பல்லடம்
    பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த பல்லடம் மின்வாரியம்...
  10. இந்தியா
    எய்ம்ஸ் கண்டறிந்த பாக்டீரியா சீன நிமோனியாவுடன் தொடர்பு: மத்திய அரசு...