அரிமா சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்
அரிமா சங்க முகாமில் ரத்தக்கொடையளித்தவருக்கு சான்றிதழ் வழங்கும் நிர்வாகிகள்
காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காரனோடையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை காரனோடை அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது
.இதில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் கஜேந்திரபாபு, சோழவரம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பங்கேற்று முகாமை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
ஆய்வாளர் ராஜ்குமார் பேசுகையில், இந்த ரத்த தானம் என்பது மிகப் பெரிய உதவி பல உயிர்களும் காக்க உதவும் என்பதும் நாள்தோறும் நம் பல்வேறு பகுதிகளில் விபத்துகள் சிக்கி நேரத்திற்கு ரத்தம் கிடைக்காமல் எத்தனையோ உயிர்கள் பலியாவதாகவும், நம் வழங்கும் இந்த ரத்தத்தினால் நமக்கு கேடு ஏதும் நடக்காது.
ஒவ்வொருவரும் இதனை கருத்தில் கொண்டு இது போன்று தானங்கள் செய்யும் போது அதில் கிடைக்கும் சந்தோஷம் சொல்வதற்கு வார்த்தைகளை இல்லாத அளவிற்கு நமக்கு அது நிம்மதி தரும். இதை உணர்ந்து ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்வது நமது கடமையாகும் என்று.இதுபோன்று ரத்த தானம் வழங்குபவர்களுக்கு தாங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.
சென்னை அரிமா ரத்த வங்கியிலிருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் அளித்த ரத்தவகைகளை சேகரித்து சென்றனர்.முகாமில் கலந்து கொண்டவர் களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.ரத்த அழுத்த பரிசோதனையும், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் காரனோடை அரிமா சங்க தலைவர் கருப்பசாமி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் செயபாலன் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu