பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம், கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அண்ணாசிலை அருகே நடைபெற்றது.
.பொன்னேரியில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்களை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அண்ணாசிலை அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஆனந்தபிரியா தலைமை வகித்தார். சட்டமன்ற பொருப்பாளர்கள் பரமானந்தம். ரவி.நரேஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் கண்டன உரையாற்றினர்.
மாநில பொறுப்பாளர்கள் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், கே.ஆர்.வெங்கடேசன், குமார். ஆர்.சி.பாலாஜி, அன்பாலய சிவக்குமார். மாவட்ட பொறுப்பாளர்கள் நரேஷ்குமார். மகாலட்சுமி. நந்தன். பிரபு அத்திப்பட்டு துரைகண்ணு. சிவ கோகுலகிருஷ்ணன், திவாகரன்,சுமதி. ஒன்றிய பொறுப்பாளர்கள், மகேஷ்வரி, பொன்னேரி நகரத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைவரும், தமிழக அமைச்சர்களான விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியும் பதவி விலக வேண்டுமென கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து இரவு 9 மணி அளவில் விடுவித்தனர். இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu