சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியர்களுக்கும் பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம்
சிறுவாபுரி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடை மூடப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த 100 க்கும் பக்தர்கள் வாக்குவாதம். பக்தர்களை அனுமதிக்குமாறு கோவில் கதவை இழுத்ததால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாய் 1.கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு. கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை அடுத்து கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நேற்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் சிறுவாபுரி செங்குன்றம் செல்லும் சாலையில் இருந்து வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து. சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தொடர்ந்து இரவும் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். எனினும் குறிப்பிட்ட நேரத்தில் கோவில் நடையும், கதவும் மூடப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விரக்தியடைந்தனர். தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் கதவை திறந்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவிலின் கதவையும் பக்தர்கள் இழுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu