குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஆரணி அத்திகுளம் சீர் செய்யப்படுமா.

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் அத்திகுளம்
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் அத்திகுளம் தூர்வாரி கரை கரை அமைத்து பூங்கா அமைக்க ஆரணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 18,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் அத்திகுளம் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஒன்று உள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் உள்ள நீரை நம்பி இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த குளமானது ஆக்கிரமிப்பு பிடிகளில் சிக்கியுள்ளதால், குளத்தில் பரப்பள்ளவு சுருக்கிப்போனது.
இது மட்டுமில்லாமல் சுற்றியுள்ள குடியிருப்புகளில் பயன்படுத்தும் கழிவுநீர் ஆனது வாய்ப்புகள் மூலம் குளத்தில் தீர்ந்துவிடப்பட்டு சேரும் சகதியாகவும் மாறி துர்நாற்றம் வீசுவதோடு அதில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், இந்த குளத்தின் நீரை நம்பி இப்பகுதி கடந்த காலத்தில் வாழ்ந்து வந்ததாகவும். தற்போதாவது குளத்தை தூர்வா வராததால் அடர்ந்த செடி கொடிகள் முள் புதர்கள் வளர்ந்து காணப்படும் குளத்தை சீர் செய்ய வேண்டும் என்றார்.
எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ஆரணி பேரூராட்சி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu