ஆரணி பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

ஆரணி பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி:  மருத்துவமனையில் அனுமதி
X

பொன்னரசி நிலவழகன்.

ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில் 13-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பொன்னரசி நிலவழகன். கடந்த சில நாட்களாக ஆரணி பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாக பேரூராட்சி மன்ற கூட்டத்திலும், அதிகாரிகளிடமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதன் காரணமாக திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தம்மீது பழி வாங்கும் நடவடிக்கையாக அவதூறு பரப்புவதால் மன உளைச்சலில் இருந்த திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி நேற்று அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் பெண் கவுன்சிலரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திமுக பெண் கவுன்சிலர் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்ட பெண் கவுன்சிலர் மீது அவதூறு பரப்புவதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!