ஜனநாயர வாலிபர் சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்போதை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசார நடைபெற்றது.
இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார் .மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட தலைவர் கலையரசன், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார்.பழவேற்காட்டில் துவங்கிய இருசக்க வாகன பயணம் திருப்பாலைவனம், தத்தை மஞ்சு, காட்டூர், திருவல்லைவாயல் வழியாக பயணித்து மீஞ்சூரில் நிறைவடைந்தது.
இதில் பேசியவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் 70 சதவிகிதம் போதைப் பழக்கங்கள் அதிகரித்து உள்ளது எனவும், சமூகத்தை சீரழிக்கின்ற கஞ்சா,அபின், ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு இந்தியாவில் 10 கோடி பேர் அடிமையாகி உள்ளனர்.
அதில் பெரும்பாலானவர்கள் உழைப்பை நம்பி அன்றாட பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாகவும்,விமானம் வழியாகவும் சட்டவிரோதமாக கொண்டு வந்து குவிக்கப்படும் கொடிய போதை பொருட்களை தடுக்க ஒன்றிய பாஜக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர் இதிலிருந்து இளைஞர்களையும் ,நடுத்தர வர்க்கத்தினரையும் ,காப்பாற்ற இந்த வாகனப் பிரசாரம் தமிழக முழுவதிலும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.இதில் திரளான இந்திய வாலிப சங்க இளைஞர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu