உலகத் தண்டுவடம் பாதிப்பு தினம்: பாதிக்கப்பட்டோர் விழிப்புணர்வு பிரசாரம்
ஆரணி அருகே சிறுவாபுரியில் நடைபெற்ற உலகத் தண்டுவடம் பாதிப்பு தினத்தை ஒட்டி(Sipa) தண்டுவடம் காயமடைந் தோர் அமைப்பின் சார்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக பாதுகாப்பு கருதி தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம், ஆரணி அடுத்த சிறுவாபுரி பகுதியில் உலகத் தண்டுவடம் பாதிப்பு தினத்தையொட்டி இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த விதமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இருசக்கர வாகனத்தில் தல கவசம் அணியாமல் விபத்து ஏற்பட்டு முதுகுத் தண்டு பாதித்தவர்கள் கடந்த 2022 ஆண்டில் 40 ஆக இருந்த நிலையில் 2023 நடப்பாண்டில் 82 ஆக உயர்ந்துள்ளது.
இதில் முக்கியமாக பெரியவர்கள் மட்டுமல்ல ஏழு வயது சிறுவர்கள் கூட அதிக அளவில் பாதிக்கப்பட்ட உள்ளதாக தெரிய வருகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும் நபர் மட்டும் இல்லாமல் இருசக்கரத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும், கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என பாதுகாப்பு விழிப்புணர்வை குறித்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பொது மக்களிடையே துண்டு பிரசாரம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu