முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!
X
பொன்னேரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

பொன்னேரி அருகே 19ஆண்டுகளுக்கு முன்பு படித்த தனியார் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2005ம் ஆண்டு +2 பயின்ற அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

19ஆண்டுகளுக்கு முன்னர் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தனியார் நிறுவனம், சுயதொழில், வெளிநாடு என பல்வேறு பணிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளையும் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த மலரும் நினைவுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களை கௌரவித்து அவர்களுடனான நினைவுகளையும் நிகழ்வில் நினைவு கூர்ந்தனர். தங்களது பள்ளி கால நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களை ஆரத்தழுவியும், அனைவரும் செல்ஃபி எடுத்தும் முந்தைய நினைவுகளை அசை போட்டனர்.

தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் தாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கு சுமார் 30000ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவாக வழங்கினர்.

Tags

Next Story
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!