அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை; இருவர் காவல் நிலையத்தில் சரண்

அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை;  இருவர் காவல் நிலையத்தில் சரண்
X
கஞ்சா விற்பனையை தடுத்த அதிமுக கிளைச் செயலாளரை நள்ளிரவில் கொலை செய்த கொலையாளிகள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன், இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே சிலம்பரசன் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிலம்பரசனை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித் குமார் ஆகிய இருவர் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுதத்தால் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசனை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரிடமும் சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!