ஆதிதிராவிடர் மாணவ விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, மாணவியர் விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்
தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் அடுத்தவரை பார்க்கும் போது மனிதனாக மட்டுமே தெரிய வேண்டும் எனவும், மதம், சாதி, இனம் என பாகுபாடு கூடாது எனவும், ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும் அடிப்படை மாற்றமே சாதிய பிரச்னைக்கு தீர்வு என்றார் அமைச்சர் கயல்விழி.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, மாணவியர் விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். சமையலறை, மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவினை சாப்பிட்டும், குடிநீர், கழிவறை உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து விடுதியில் தங்கியுள்ள மாணவ - மாணவிகளிடம் அமைச்சர் கயல்விழி கலந்துரையாடி,விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அனைத்து விடுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பட்டியலில் கொடுக்கப்பட்ட உணவு முறையாக வழங்கப்படுகிறதா, இருப்பு பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் குறித்த பதிவேடு தொடர்ச்சியாக அவர்களின் வருகை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதில் சில மாணவர்களுக்கு உதவி தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மீஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் .
விடுதிகளில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வித்துறை மற்றும் காவல்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களிடம் கஞ்சா பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் அரசு விதிமுறைகளின்படியே ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெற்று வருகிறது. சாதி, மதம் என்பதை பொறுத்தவரையில் தனிமனிதன் ஒவ்வொருவர் மனதிலும் மாற்றம் வர வேண்டும் எனவும், பல ஆண்டுகளாக ஊறிக்கிடக்கும் சாதிப்பிரச்னை யை படிப்படியாக தான் போக்க முடியும்.
தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் அடுத்தவரை பார்க்கும் போது மனிதனாக மட்டுமே தெரிய வேண்டும். மதம், சாதி, இனம் என பாகுபாடு கூடாது. ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும் அடிப்படை மாற்றமே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்றும் அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu