5ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

5ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
X

பிணையில் வெளிவந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது 

கொலை வழக்கில் பிணையில் வந்து 5ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

மீஞ்சூரில் கொலை வழக்கில் பிணையில் வந்து 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது. வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த நபரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த. கேசவபுரத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணராஜ் (2016ல் அவருக்கு 39 வயது). இவர் பழைய அட்டை, பேப்பரை தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு கிருஷ்ணராஜை வழிமறித்த நபர் இரும்பு ராடால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி அவரிடம் இருந்த 2.5சவரன் தங்க சங்கிலி, செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய கிருஷ்ணராஜ சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சண்முகம் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த நிலையில். கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து மீஞ்சூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நண்பர்கள், உறவினர்கள் பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்ட விசாரணையில் வேளாங்கண்ணியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான காவல்துறையினர் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த சண்முகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!