ஆரணி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பெண்கள் கைது

ஆரணி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பெண்கள் கைது
X

ஆரணி அருகே வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட பெண்கள்.

ஆரணி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் இரண்டு பெண்களை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸார் சோதனை மேற்கொண்டு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் உள்ள அத்திக்குளம், மேடு கம்பர் தெரு பகுதிகளில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக ஆரணி போலீஸாசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, ஆரணி போலீஸார் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி கம்பர் தெரு பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்த காஞ்சனா (வயது 32) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 13 மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஆரணி அத்திக்குளம் மேடு பகுதியில் நடத்திய சோதனையில், வீட்டில் பதுக்கி வைத்த மது விற்பனை செய்த பத்மாவதி (65) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 9 மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இரண்டு பெண்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதியின்றி மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs