பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா
X

ஆண்டாள் தாயாருடன் வீதிவுலா வந்த கரிகிருஷ்ண பெருமாள் 

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா.ஆண்டாள் தாயாருடன் எம்பெருமான் தங்க தொட்டியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் ஆரணி ஆற்றங்கரையோரம் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கரிகிருஷ்ண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழா, 40ஆண்டு உற்சவர் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில் நடைபெற்றது தொடர்ந்து

ஆண்டாள் தாயாருடன் கரிகிருஷ்ண பெருமாளுக்கு பட்டாச்சார்யார்கள் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவின் சிறப்பம்சமாக ஆண்டாள் தாயாருடன் தங்க தொட்டியில் எழுந்தருளிய கரிகிருஷ்ண பெருமாள் ஆலய மாட வீதி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க எம்பெருமான் வீதிவுலா வந்த கரிகிருஷ்ண பெருமாள் ஆண்டாள் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவைக் காண பொன்னேரி சுற்றியுள்ள மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, புது வாயில், ஆரணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!