பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படை மூலம் கொலை செய்த பெண்

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படை மூலம்  கொலை செய்த பெண்
X

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த கள்ளக்காதலி கைது

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படை மூலம் பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த கள்ளக்காதலி கைது. கூலிப்படையினர் 4.பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன்( 27). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அண்மை காலமாக வேலை ஏதுமின்றி இருந்து வந்துள்ளார். பொன்னேரி சிவன் கோவில் பகுதியை சேர்ந்த திருமணமான பிரியாவிற்கும், திருமணமாகாத கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கோபாலகிரிஷ்ணனுக்கும், பிரியாவிற்கு இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு நேற்று மாலை தொலைபேசியில் பேசிய போது முற்றியுள்ளது.

இதனையடுத்து பிரியா கூலிப்படையினருடன் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரைத் தேடிய போது பொன்னேரி நகராட்சி அலுவலகத்தின் அருகே இருந்துள்ளார். அப்போது 4.பேர் கொண்ட கும்பல் கோபாலக்கிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் கீழே சரிந்து விழுந்தார். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கோபாலகிருஷ்ணனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து பொன்னேரி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சென்னை புழலில் நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் பிரியா கைது செய்யப்பட்டு பொன்னேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து பிரியாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய 4பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








Tags

Next Story
ai and future of education