பொன்னேரியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு

பொன்னேரியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு
X

சிசிடிவி காட்சி.

பொன்னேரியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பபட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்த லீலா என்பவர் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை லீலா வழக்கம் போல தமது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கடையின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு வேலை பார்த்து வந்தார். மாலை வீட்டிற்கு செல்வதற்காக பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத்தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பிற்பகல் 2மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் நோட்டமிட்டபடியும் லீலாவின் இருசக்கர வாகனத்தின் அருகே நிற்கும் மர்ம நபர் சிறிது நேரம் நோட்டம் பார்த்து வாகனத்தை அங்கிருந்து லாவகமாக தள்ளிக்கொண்டு திருடி செல்கிறார்.

இதே போல இன்று காலை கடைக்கு வந்த வாடிக்கையாளர் வேலு என்பவரது சைக்கிளை அங்கு வந்த மர்ம நபர் திருடி செல்கிறார். இந்த காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனம், சைக்கிளை திருடி சென்ற நபரை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர். பொன்னேரியில் நடைபெற்று வரும் தொடர் வாகன திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டப்பகலில் கடையின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம், சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த வாரம் திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள பிரபல ஜவுளி கடை முன்பு குடும்பத்துடன் ஜவுளி வாங்க வந்த நபரின் இரு சக்கர வாகனம் திருடு போனது இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story