வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
X
பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம்,ரொக்கம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 7.5 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50000 ரொக்கம் கொள்ளை. காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்ன வேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று தமது குடும்பத்தினருடன் சாமி கும்பிட ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்றுள்ளார்.

திருப்பதி சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதிலிருந்த 7.5 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், 50.ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!