போலீஸ்காரரிடம் தகராறு செய்த 'குடி' மகன்; வைரலாகும் வீடியோ

போலீஸ்காரரிடம் தகராறு செய்த குடி மகன்; வைரலாகும் வீடியோ
X

போதை நபரின் வீடியோ காட்சி படங்கள்

Police Case -செங்குன்றம் பகுதியில், போதையில் இருந்த நபர், போலீஸ்காரரிடம் தகராறு செய்த வீடியோ, வைரலாகி பரவி வருகிறது.

Police Case -பணி முடித்து, வீடு திரும்பிய போலீஸ்காரரிடம், போதை நபர் தகராறு செய்தார். அவரை தாக்க முயன்ற போதை நபர், போலீஸ்காரரின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தும், ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசியும், அட்டூழியத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை, மணலி புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலர் தமிழரசன். இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு, செங்குன்றத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் அருகே பள்ளிக்குப்பம் பகுதியில், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த போதை நபர் ஒருவர், போலீஸ்காரரின் வாகனத்தின் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழரசன் அந்த நபரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தமிழரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் வந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தும், அவரது வாகனத்தில் இருந்த ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடைய பெயர் ராசையா என்றும், தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கீழ்த்தரமான வார்த்தைகளில் போலீஸ்காரரை வசை பாடிய போதை நபர், 'நீதான் போதையில் வந்து என்னை இடித்து விட்டாய்' என்று கூறி தமிழரசனை தாக்கவும் முற்படுகிறார்.

மேலும் தனது சட்டையை கழற்றி சாலையில் வீசி, அரை நிர்வாணமாகி தமிழரசன் மீது காறி உமிழ்ந்து அட்டூழியத்தில் ஈடுபடும் போதை நபர் 'யார் வந்தாலும், என்னை எதுவும் செய்ய முடியாது' என கூறிவிட்டு, அங்கிருந்து தமது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்கிறார்.

வேகமாக தன் மீது மோத வந்த இருசக்கர வாகன ஓட்டியை கேள்வி எழுப்பிய போலீஸ்காரர் மீது போதை நபர், தாக்குதல் நடத்த முற்பட்டு இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.. இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!