காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் 78 பேட்டரிகளை திருடிய 7 பேர் கைது

78 பேட்டரிகள் திருடப்பட்ட அதானி துறைமுகம் (பைல் படம)
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் கடந்த 21ம் தேதி கன்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 78 பேட்டரிகளை கொள்ளை போனதாகவும் அதனை கண்டுபிடித்து தருமாறு அதானி துறைமுகம் சார்பில் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த காட்டூர் காவல்துறையினர் சூப்பர்வைசர் உமாசங்கர் அளித்த தகவலின் அடிப்படையில் அதானி துறைமுகத்தில் ஓட்டுனராக பணிபுரியும் திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் சேர்ந்த வெங்கடேசன், இளமாறன், பாண்டி கண்ணன், பார்த்திபன், கார்த்திக், சதீஷ்குமார், நிர்மல் ஆகியோர் கூட்டு சேர்ந்து பேட்டரிகளை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து 78பேட்டரிகளையும் பறிமுதல் செய்து 7 பேரையும் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu