மது போதையில் இளைஞரை வெட்டி கிணற்றில் வீசிய 3 பேர் கைது

மது போதையில் இளைஞரை வெட்டி கிணற்றில் வீசிய 3 பேர் கைது
X

கொலை செய்யப்பட்ட அஜீத்

மீஞ்சூர் அருகே மது அருந்த போது ஏற்பட்ட தகராறு இளைஞரை வெட்டி கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மீஞ்சூரில் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவத்தில் மூவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்,

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அஜீத் (25). இவர் கோழி கறி கடையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 3.நாட்களுக்கு முன் இவர் வீட்டில் இருந்த போது மது குடிப்பதற்காக நண்பர்கள் அழைத்து சென்றனர். அதன் பிறகு வீட்டிற்கு வராததால் இவரது குடும்பத்தினர் இவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மீஞ்சூர் அருகே ராமரெட்டிபாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் காவல்துறையினர் சம்பா இடத்திற்கு விசாரணை செய்தபோது பாழடைந்த கிணற்றில் சடலம் ஒன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி மீஞ்சூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 3.நாட்களுக்கு முன் காணாமல் போன அஜீத் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த திங்களன்று மீஞ்சூரில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தும் போது அஜீத்தை அவரது நண்பர்கள் கிண்டல் செய்ததாகவும், அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் வீட்டிற்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்து அஜீத்தை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக நாகராஜ், திருட்டு கார்த்திக், வசந்தகுமார் ஆகிய 3.பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தலைமறைவான மோகன், சாய், கணேஷ் ஆகிய மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Tags

Next Story
ai in future agriculture