அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
X

வட சென்னை அனல் மின் நிலையம்.

அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

1வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1வது நிலையில் உள்ள இரு அலகுகளிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக 630 மெ.வா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!